• Jun 11 2026

‘கருப்பு’ வெற்றி கொண்டாட்டத்துக்கு நடுவே… ரசிகர்களை எச்சரித்த ஆர்.ஜே. பாலாஜி.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

R. J. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா சூர்யாவுடன் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


வெளியான சில நாட்களிலேயே ‘கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 147 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள ஆன்மிக மற்றும் அதிரடி காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. சில தியேட்டர்களில் ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தியேட்டர்களில் சாமியாடும் நபர்களை வீடியோ எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு உடல்நல உதவி செய்யவும், பாதுகாப்பாக கவனிக்கவும் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரது இந்த மனிதநேயமான செயல் தற்போது இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.


Advertisement

Advertisement