தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் வர ஒரு நல்ல படத்துக்காக காத்திருந்தேன். அது ‘பெத்தி’ படமாக அமைந்துவிட்டது.” எனக் கூறி படக்குழுவை பாராட்டினார்.
மேலும் இயக்குநர் புச்சி பாபுவை பற்றி கலகலப்பாக பேசிய அவர், “வெளியில் அமைதியாக இருப்பார்… ஆனால் பாடல்களுக்காக வேலை வாங்கும் போது ரொம்ப டெரர்...” என்று சிரிப்புடன் தெரிவித்தார். ரஹ்மானின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!