சூர்யா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் வேட்டையும் 140 கோடிகளை கடந்துள்ளது.
இந்த நிலையில், கருப்பு படத்தில் இசைஞானி இளையராஜாவை அவமதிக்கும் வகையில் ஒரு காட்சி மற்றும் வசனம் இடம்பெற்றதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இளையராஜா மீது தங்களுக்கு உள்ள உயர்ந்த மரியாதையை தெரிவித்துள்ள படக்குழு, அந்த குறிப்பிட்ட வசனம் அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தாங்கள் புரிந்து கொள்வதாகவும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும், அந்த வசனம் எந்தவித அவமதிப்பு நோக்கத்திலும் இடம்பெறவில்லை என்றும், அது ஒரு சாட்டைரிக்கல் சூழ்நிலையின் பகுதியாக சேர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உணர்வுகளை மதிக்கும் வகையில் அந்த வசனத்தை நீக்க அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விளக்கத்துடன் இளையராஜாவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Listen News!