தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த படத்திற்காக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இது கார்த்திக் சுப்பராஜின் 10வது படம் என்றும், இளையராஜாவின் 1540வது இசை திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜா பியானோ வாசித்துக் கொண்டிருக்க, கார்த்திக் சுப்பராஜ் அவருடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிவில் அவர் “ஒரு கனவு… ஒரு ஆசீர்வாதம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டணி குறித்து இளையராஜா கூறுகையில், கார்த்திக் சுப்பராஜின் சினிமா மீது உள்ள ஆர்வம் மிகவும் சிறப்பானது என்றும், நல்ல கதையும் உண்மையான முயற்சியும் இருந்தால் இசை தானாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், அதனை தனி ஆல்பமாக வெளியிட்டால் ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது தனது நீண்டநாள் கனவு என்றும், அது தற்போது நனவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த படம் தனது 10வது படம் என்பதால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
A Dream.... A Blessing... ❤️#Dream10Blessing1540 pic.twitter.com/o349NqGJtt
Listen News!