• May 20 2024

சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள்.இவர் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.

மேலும் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா வரும் மே 29-ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement