• Sep 21 2024

படிப்பை நிறுத்த முடிவெடுத்த சந்தியா.. சிவகாமி கொடுத்த அதிர்ச்சி-இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ருவிஸ்டுகளுடன் நகரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்…

சந்தியா தன்னிடம் பழையபடி பேசுங்க என சிவகாமியிடம் கெஞ்சுகிறார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிப்பையும் விட்டு விடுகிறேன் என சொல்ல எதுக்கு அந்த பழியையும் தூக்கி என் மேல போடவா? வேண்டாம் என சொல்லும் போதெல்லாம் கேட்கவில்லை. இனிமே நீ படிப்பு வேண்டாம் என்று சொன்னாலும் நான் கேட்கப் போறது இல்லை. நீ படி அப்படி என்னதான் படிச்சு கிழிக்கிறேனு நானும் பார்க்கிறேன் என சொல்கிறார்.

இனிமே இது வீடு இல்ல போர்க்களம் இதுல ஜெயிக்கிறது நீயா நானா என்று பார்த்து விடலாம் என கூறுகிறார். உனக்கு மூணு வாய்ப்பு தான் நீ தப்பு பண்ணா அதுக்கு அப்புறம் நான் சொல்றது அதான் கேட்கணும் எனவும் சொல்கிறார்.

சிவகாமி இப்படி சொன்னதைக் கேட்டு சந்தியா வருத்தத்தோடு இருக்க சரவணன் நீங்க எதுக்கு படிப்பை விடுறேன்னு சொல்றீங்க. படிச்சு நீங்க ஐபிஎஸ் அனைத்தும் சந்தோஷப்பட முதல் ஆள் எங்க அம்மாவாக தான் இருப்பாங்க என சொல்கிறார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு சென்று இருந்தபோது அங்கு சாமியார் இந்த காலேஜை இடித்துவிட்டு கோவில் கட்டப் போவதாக சொல்ல சந்தியா உட்பட படிக்க வந்த அனைவரும் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட பின்னர் நீங்கள் படிக்கிறதுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என சொல்கின்றனர்.

அதன் பின்னர் ஆதி அவருடைய காதலி ஜெஸ்ஸியை சந்தித்து காஸ்ட்லியான போன் கிப்ட் கொடுக்கிறார். இது விலை அதிகமாச்சு என ஜெசி கேட்க இதெல்லாம் ஒரு விஷயமா? பணம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை என கூறுகிறார். சீக்கிரம் வீட்டில் வந்து பேசு என ஜெசி சொல்ல நீ பேசிட்டு சொல்லு நான் கண்டிப்பா வந்து பேசுறேன் என ஆதி பில்டப் கொடுக்கிறார்.

மேலும் இந்த பக்கம் சந்தியாவும் சரவணனும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட அதுக்குள்ள கிளாஸ் முடிந்து விட்டால் என சிவகாமி கேட்க நடந்த விஷயத்தை சரவணன் கூறுகிறார். சாமியார் கூட உன் பொண்டாட்டி படிக்கிறதுக்கு உதவி பண்ணுறாரு என சலித்துக் கொண்டு சிவகாமி உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement