• May 19 2024

'நடிப்பில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் சமுத்திரக்கனி'-இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவரும் அக் கதாப்பாத்திரத்திற்கு பொருந்த கூடியவரும் இயக்குநருமாக சினிமாவில் கலக்குபவர்தான் நடிகர் சமுத்திரக்கனி.

2003 இல் வெளியான "உன்னை சரணடைத்தேன்" என்ற திரைப்படத்தை இயக்கி விமர்சகர்களின் பாராட்டையும், ஓரளவு வணிக வெற்றியையும் இப்படம் பெற்றது. தொடர்ந்து வெளியான நாடோடிகள் அவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

விமர்சகர்கள் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற நாடோடிகள் திரைப்படம் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் விமானம் படத்தில் சமுத்திரக்கனி மாற்றுத்திறனாளியாக நடித்து வருகின்றார். கே.கே கிரியேட்டிவ் வேர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றது.தற்போது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement