• Jan 15 2025

சமந்தாவுக்கு கிடைக்கப்போகும் புது காதலர்..? அவரே சொன்ன சுவாரஸ்யம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தான் சமந்தா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவருக்கு காதல் வாழ்க்கை நிலைக்கவில்லை. இரண்டு வருடங்களிலேயே அவரிடம் இருந்து பிரிந்தார்.

இதை தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு  மயோசிட்டிஸ்  என்ற தோல் நோய் ஏற்பட்டது. இதனால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.


தற்போது மீண்டும் அதிலிருந்து மீண்ட சமந்தா, பழைய நிலைமைக்கு திரும்பி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், நடிகை சமந்தா தனக்கு fortune cookieயில் கிடைத்த ஒரு சீட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில், ஆகஸ்ட் 1ம் தேதி காதலர் கிடைப்பார் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் "01.08 Sounds like a date?" என சமந்தா பதிவிட்டு இருக்கிறார். 

Advertisement

Advertisement