• Mar 31 2025

வாய்ப்பே இல்லை என்றாலும் பரவாயில்லை.. வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்: சமந்தா

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகில் 60 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவுக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் வாய்ப்பே இல்லாமல் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை, வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என நடிகை சமந்தா கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக சமீப காலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதும் வெப் தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் பல சூப்பர் ஹிட் கொடுத்த 60 வயது நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நடிகர் உடன் பல நடிகைகள் மகள் வயதில் இருந்தாலும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் அதேபோல் சமந்தாவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட பத்து கோடி வரை சம்பளம் கொடுக்க முன்வந்தும் கூட சமந்தா அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்றும் வாய்ப்புகள் கிடைக்காமல் வீட்டில் இருந்தால் கூட பரவாயில்லை 60 வயதில் நடிகர்களுக்கு  ஜோடியாக நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அந்த நடிகர் தனது முந்தைய படத்தில் நடித்த நடிகையை தொடர்பு கொண்டு அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement