• May 20 2024

மீண்டும் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா- அடடே வேற லெவல் கியூட்டாக இருக்கிறாங்களே...

stella / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு, தற்போது பாலிவுட்டிலும் படிப்படியாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை சமந்தா, தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார். 


பேமிலி மேன்2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே தான் இந்த சிட்டாடெல் வெப் தொடரையும் இயக்கி வருகின்றனர்.சிட்டாடெல் வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இது ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிட்டாடெல் வெப் தொடரின் ரீமேக் ஆகும்.


இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது தவிர விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். 


இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement