சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கிரிஷ் விஜயாவ பார்த்து பாட்டி என்று பெரிய சத்தமா கத்துறார். அதைக் கேட்ட விஜயா பயப்படுறார். பின் கிரிஷை பார்த்து உனக்கு அறிவில்லையா என்று கோபமாக பேசுறார். அதனை அடுத்து அண்ணாமலை குழந்தையை பார்த்து ஏன் இப்புடி எல்லாம் பேசுற என்று கேட்கிறார். பின் முத்து கிரிஷ் எல்லாரையும் நல்லவங்க என்று நினைச்சு விளையாடியிருப்பான் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து மனோஜ் கிரிஷை பார்த்து நீ வரவர ரொம்ப சேட்டை பண்ணிக் கொண்டிருக்கிற என்று சொல்லி அடிக்கப்போறார். அதை பார்த்த ரோகிணி மனோஜூன்ட் கையை பிடிக்கிறார். மேலும் அவன் சின்ன பையன் அவனப் போய் எதுக்காக அடிக்கிற என்று கேட்கிறார். அதனை அடுத்து மனோஜ் கிரிஷ் மேல கை வைச்சால் நடக்கிறது வேற என்று சொல்லுறார்.
அந்த நேரம் பார்த்து பார்வதி விஜயா வீட்ட வந்து ரதி- தீபன் வீட்டு ஆட்கள் என்ர வீட்ட வந்து நஷ்ட ஈடு கேட்கிறாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா அவங்க ஏன் சம்மந்தமே இல்லாமல் உங்க கிட்ட பணம் கேட்கணும் என்கிறார். பின் முத்து, மனோஜ் தான் ரதி வீட்ட போய் பணம் கொடுக்கிறோம் பிரச்சனையை பேசி முடிங்க என்று சொன்னான் அதுதான் அவங்க வந்தாங்களோ தெரியல என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட விஜயா ரோகிணியை பார்த்து எதுக்காக நீ இப்புடி எல்லாம் செய்தனீ என்று கேட்கிறார். மேலும் அவங்க கேட்கிற பணத்தை நீயே கொடுத்திரு என்று ரோகிணி கிட்ட சொல்லுறார். பின் மனோஜ் முத்து கிட்ட ஹெல்ப் பண்ணச் சொல்லுறார். இதனை அடுத்து ஸ்ருதி ரோகிணியை பார்த்து பொலீஸ் கிட்ட போய் சொல்லுங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!