தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். எப்பொழுதும் நேர்மையாகவும் நேரடியாகவும் பேசும் அவர், சமீபத்திய பேட்டியில், சூர்யா நடித்த "ரெட்ரா" படத்தையும், தனது அடுத்த படப்பிடிப்புத் திட்டங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறிய தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதன்போது லோகேஷ் கனகராஜ் ,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரா படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அதை இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றும், ஆனால் படம் நிச்சயமாக நன்றாகவே இருக்கும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து, அவர் மற்ற இயக்குநர்களின் பணியையும், நடிகர்களின் முயற்சியையும் மதிக்கும் ஒருவராகவே இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. பேட்டியில், ரசிகர்கள் கேட்டதற்குப் பதிலளிக்கும்போது, "இன்று இரவு ரெட்ரா படத்தப் போய் பாத்திடுவேன்" என உறுதி அளித்தார். இது, ரசிகர்களிடையே ஒரு ஆவலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. லோகேஷ் படம் பார்த்த பிறகு அவர் தரப்பிலிருந்து படம் குறித்து இன்னும் சிறப்பான கருத்துக்கள் வெளிவரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
இந்த பேட்டியின் போது அவரது அடுத்த பட திட்டங்கள் பற்றிய அப்டேட்டுக்களையும் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “கூலி படம் ஆகஸ்ட் 14ம் திகதி வரப்போகுது. இந்த படம் ரஜினி நடிப்பில் உருவாகி வருகின்றது என்றதுடன் இப்படம் பலரும் எதிர்பார்க்கத்தக்க வகையில் அமைந்திருக்கும்" எனவும் கூறினார்.
அத்துடன் சூர்யா நடிப்பில் உருவாகும் ரோலெக்ஸ் படத்திற்காக ரசிகர்கள் ஆண்டுகாலமாக காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் சமீபத்தில், நடிகர் ஸ்ரீ பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள், குறிப்பாக அவரது மனநிலை மற்றும் வாழ்க்கை சவால்கள் தன்னை கவலைக்குட்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
Listen News!