• Oct 22 2024

ரோபோ ஷங்கரின் காதலர் தினக் கொண்டாட்டம் இலங்கையிலா? மனைவி என்ன செய்துள்ளார் பாருங்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தமது சினிமா பயணத்தை முதலில் சின்னத்திரையிலிருந்து தான் ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறு சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாறிய பிரபலங்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். 


இவர் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சி மூலம் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக மாறியவர். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் காமெடியனாக வலம் வந்த இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.


அத்தோடு காமெடியில் இவரை அடிச்சுக்கவே ஆள் இல்லை என்று கூறுமளவிற்குப் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள்  பலருடனும் இணைந்து நடித்து வருகின்றார்.  இந்நிலையில் நேற்றைய தினம் பிரபலங்கள் பலரும் காதலர் தினத்தைக் கொண்டாடி உள்ளனர்.


அந்த வரிசையில் ரோபோ ஷங்கரும் தனது மனைவியுடன் இணைந்து இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 'TILKO hotel' இல் கொண்டாடி இருக்கின்றார்.


இதுகுறித்த புகைப்படங்களை அவரின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவற்றை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement