• Sep 21 2024

“ஊர்வசி இங்க வாடி..” என கூப்பிட்ட ஆர்.ஜே.பாலாஜி-திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக அறிமுகமாகி தீயா வேலை செய்யனும் குமாரு, வடகறி போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இது தவிர தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாகவும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து வீட்ல விசேஷங்க” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார்.அந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். மேலும் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அத்தோடு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கலகலப்பாக நடந்து முடிந்தது. அப்போது பேசிய ஊர்வசி கூறுகையில், ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென பாலாஜி, ‘ஊர்வசி இங்க வாடி’ என கூப்பிட்டான்’ என கூறினார். அருகில் இருந்த ஆர்ஜே பாலாஜி, ‘அது உங்களுக்கு கேட்காதுன்னு நெனச்சேன், கேட்டுருச்சா’ என பேசி சமாளித்து விட்டார்.

என்ன இருந்தாலும் ஊர்வசி வயதில் மூத்தவர், வெகு காலமாக சினிமாவில் இருக்கும் மூத்த நடிகையும் கூட. அவரை கலாய்ப்பததாக இப்படியா பேசுவது? என்று ஆர்.ஜே.பாலாஜியை பலரும் வசைபாடி வருகின்றனர். ஆனால் இதனை ஊர்வசி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவனும் (ஆர்.ஜே.பாலாஜி) தன் வீட்டு பிள்ளை போல, ஒருவன் தான் என நினைத்து அதனை மேடையில் வெளிப்படையாக கூறி சிரித்து மகிழ்ந்து விட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement