• Apr 28 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற முடிவெடுத்த ரேஷ்மா- அவருக்கு பதிலாக இந்த நடிகையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக பாக்கியலட்சுமி ஓடுகிறது . கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எப்படி தங்களது வாழ்க்கையை தைரியமாக சந்திக்க வேண்டும் என தொடர் எடுத்து காட்டுகிறது. இந்த சீரியல் குடும்ப பெண்களுக்கு விருப்பத்துக்குரிய ரியலாக இருக்கிறது .



தற்போது  கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி யாரை திருமணம் செய்யப்போகிறார் என தெரியவில்லை. அதேபோல் ரூ. 70 லட்சத்தை கொடுத்து வீட்டை எழில் மீட்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இணையத்தளங்களில்  எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.



தற்போது என்னவென்றால் தொடரில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ரேஷ்மா தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் அவருக்கு பதிலாக இனி ராதிகாவாக, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.எனவே காத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement