ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப் படத்துக்கான தியேட்டர் காட்சிகளும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் லவ் டுடே இயக்குனராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இப் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.
மேலும் இப் படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப் படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் 2k கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த லவ்டுடே படத்தின் மாமாக்குட்டி பாடல் வீடியோ வெளியானது. லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Listen News!