• Sep 09 2024

நான் எதுக்கு பிக்பாஸிற்கு போகணும்..? காட்டுக்குள் போக சொன்னால் கூட போவேன், ஆனால்..?.. கோபத்துடன் நடிகை ரேகா நாயர் கூறிய தகவல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து இன்று தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவரே ரேகா நாயர். அந்தவகையில் இவர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகியிருந்த 'இரவின் நிழல்' என்ற படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததன் காரணமாக சிறுது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தார்.


ரேகா நாயரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பல தரப்புக்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருந்தன. அதிலும் குறிப்பாக பயில்வான் ரங்கநாதனுக்கும், இவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றமையை யாராலும் மறக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து விரைவில் ஆரம்பமாகவிருக்கும் பிக்பாஸ் சீசன்-7 இல் ரேகா நாயரும், பயில்வானும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இதுகுறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரேகா நாயர். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "பிக்பாஸ் வீட்டுக்குள் நான் எதுக்குப் போகணும், என்னை ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால் கூட நான் அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன் ஆனால் எதுக்காக நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகணும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் "கடந்த 3 சீசனாக நான் பிக் பாஸ் வீட்டிற்குள் போக போகிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள், அவங்கள விடுங்க முதலில் எனக்கு அங்கு செல்ல விருப்பம் வர வேண்டும் அல்லவா. 100 நாள் போய் அந்த வீட்டிற்குள் இருப்பதற்கு பதில் 100 மரம் வைத்திருக்கலாமே என்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற என் நண்பர்களிடம்கூடி நான் கேட்கல. பிக்பாஸ் வீட்டிற்குள் போவதற்கு எனக்கு கொஞ்சமும் ஈடுபாடு இல்லை" எனவும் தெரிவித்துள்ளார் ரேகா நாயர்.


தொடர்ந்து அவர் பேசுகையில் "அயோக்கியதனமான வேலைகளை எல்லாம் யூட்யூப் செய்கிறது, நான் என்ன பேசுகிறோனோ அதை முழுவதுமாக போடாமல் அதனை எடிட் செய்து ஒட்டி வெட்டி போட்டால் என் கருத்து முழுமையாக மற்றவர்களை சென்றடையாது" எனவும் தெரிவித்துளளார்.

அத்தோடு "உதாரணத்திற்கு பேருந்தில் பயணிக்கிறீர்கள், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை இடுப்பு தெரிவது போல் இருந்து அதனை ஒரு ஆண் பார்த்து தவறாக நடந்து கொள்கிறான் என்றால், உடனே அவனை அடித்து தட்டி கேட்க கூடிய தைரியம் இருந்தால் மட்டும் அது போன்ற ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஆடையையும் தவறாக அணிந்து கொள்வீர்கள், ஆண்களையும் தவறாக சொல்வீர்கள் என்றால் என்ன அர்த்தம்?" எனவும் தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ரேகா நாயர்.

Advertisement

Advertisement