• Sep 22 2023

சிறைக்குச் செல்லும் நடிகர் பவன் கல்யாண்... காரணம் இதுதானா..?

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு சூப்பர் ஹிட் நடிகர் தான் பவன் கல்யாண். இவர் சிறந்த சினிமா நடிகர் மட்டுமல்லாது சிறந்த அரசியல் வாதியும் கூட. அதுமட்டுல்லாது மற்றும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் புதிய நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுத்ததற்கு வெளிநாட்டு நிறுவனங்களில் சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊழல் புகாரின் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்


அந்தவகையில் ராஜமுந்திரி சிறையில் சினேகா பிளாக்கில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஜன சேனா தலைவரும், சினிமா நடிகருமான பவன் கல்யாண் நாளை சந்திக்க உள்ளார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் ராஜமுந்திரி வரும் பவன் கல்யாண், சந்திரபாபுவின் குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement