சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்.
சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களில் நடித்தும் இறுக்கின்றார். அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா' ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாது 'கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார்.
இவ்வாறாக வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தமை பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனையடுத்து இவர் குறித்த பல விடயங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சத்யப்ரியா இதுகுறித்துப் பேசுகையில் "இன்னும் பேர் வேணும், இன்னும் புகழ் வேணும், இன்னும் பணம் வேண்டும் என்பதற்காவே மாரிமுத்து வந்த வேலை எல்லாம் ஒத்துக்கிட்டு செய்தார், அது படமாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி எல்லாத்தையும் ரொம்ப ஹார்ட் வேர்க் பண்ணிப் பண்ணுவார்" என்றார்.
அதுமட்டுமல்லாது "அவர் ஒரு ஹார்ட் பேசன்ற் என்ற விஷயம் எங்களுக்குத் தெரியாது, அதை எதற்காக எங்களிட்ட சொல்லாமல் மறைத்தார் என்றும் தெரியல, அப்பிடி தெரிந்திருந்தால் அன்றைக்கு அவருக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லேன்னு சொன்னப்போ எதிர்நீச்சலில் ஞானம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கமலேஷ் இருந்தார் அவர் தனியாக விட்டிருக்க மாட்டார், கூடவே போயிருப்பார், எதற்காக மாரிமுத்து அதை மறைத்தார் என்று தெரியல" என ரொம்பவும் பீல் பண்ணி சொல்லி இருக்கார் சத்ய ப்ரியா.
Listen News!