• Apr 15 2026

ஹலோ மிஸ்டர் விஜய் டிவி.. கலைஞர்களிடம் ஜாதி பார்க்கலாமா? நாஞ்சில் விஜயன் குற்றச்சாட்டு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளால் பிரபலமானவர்  நாஞ்சில் விஜயன் . இவர் "சிரிச்சா போச்சு", "அது இது எது", "கலக்கப்போவது யாரு" போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.  இவர் தற்போது விஜய் டிவி மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவருடைய கடிதத்தில், "ஹலோ மிஸ்டர் விஜய் டிவி சமூக வலைதள அட்மின், நான் கடந்த 15 வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாரும் போடாத, தயங்கக்கூடிய பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக செய்து மக்களை மகிழ்ச்சி அளித்துள்ளேன். 

விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்காக கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்துக்களை நீங்கள் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த மனஉளைச்சலும் இல்லை, அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் கூறியுள்ளேன்.


ஆனால், எனக்கும் கடந்த வாரம் தான் பிறந்த நாள். என்னுடைய பிறந்த நாளுக்காக நீங்கள் ஒரு வாழ்த்தை கூட கூறவில்லை. ஏன் மறந்து விட்டீர்கள்? அல்லது, அதை தவிர்த்து விட்டீர்களா? அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ந்த உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று பிரித்தார்கள். இப்போது நீங்கள் அதே போல பார்த்து கொண்டிருக்கிறீர்களா? தொலைக்காட்சியில் உச்சப் புகழ் பெற்ற கலைஞர்களை உயர்  ஜாதி, மற்றும், என்னை போன்ற ஒரு அங்கீகாரம் பெற துடிக்கும் கலைஞர்களை கீழ் ஜாதி என்று பார்ப்பது எனக்கு வேதனையுள்ளதாக உள்ளது  என்றார்.

மேலும், இந்த நிகழ்வு விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனென்றால், இப்படிப்பட்ட முடிவுகளை விஜய் டிவி சமூக வலைதளத்தை பார்க்க கூடிய அட்மின் தான் முடிவு செய்வார்கள் மற்ற அதிகாரிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு இது எல்லாம் ஒரு விஷயமா கடந்து போ நாஞ்சில் விஜயன் என்று சொல்பவர்களுக்கு, நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்படித்தான் பல வருடங்களில் நாம் உரிமைகளை நாம் பெற மறுக்கிறோம். நம் உரிமையை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும் என நாஞ்சில் விஜயன் அதில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement