இந்திய சினிமாவில் மிக வேகமாக உயர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்கிறார் ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய மொழிப் படங்களில் தொடங்கி, பாலிவுட் வரை தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்ட ராஷ்மிகா, தற்போது தேசிய அளவில் ரசிகர்கள் கொண்ட முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, AI தவறாக பயன்படுத்தப்படுவது பெண்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற விவகாரத்தில் அவர் பதிவு செய்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.
ராஷ்மிகா தனது பதிவில், செயற்கை நுண்ணறிவு என்பது மனித முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய சக்தி என்றும், ஆனால் அதையே சிலர் பெண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருவது கடும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

அதாவது, “செயற்கை நுண்ணறிவு மனித முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி. ஆனால் அதை பெண்களுக்கு எதிராக சிலர் பயன்படுத்துகிறார்கள். இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல; அது எதையும் கற்பனை செய்து உருவாக்கக்கூடிய ஓவியப் பலகை.” எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும், “ஏஐயை முன்னேற்றமான சமுதாயத்தை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். பொறுப்பைத் தேர்வுசெய்யுங்கள்; பொறுப்பில்லாத தன்மையை அல்ல. மனிதர்களாக நடக்க முடியாதவர்கள் கடுமையான மற்றும் மன்னிப்பில்லாத தண்டனையைச் சந்திக்க வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகாவின் பதிவுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் ஏராளமான நடிகர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
“When truth can be manufactured, discernment becomes our greatest defence.”
AI is a force for progress, but its misuse to create vulgarity and target women signals a deep moral decline in certain people.
Remember, the internet is no longer a mirror of truth. It is a canvas where…
Listen News!