• Sep 21 2023

மனைவியோடு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மேனேஜரால் அதிர்ச்சிக்குள்ளான ராஷ்மிகா மந்தனா- வெளியாகிய வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவரது சொத்து மதிப்பு  சுமார் $8 மில்லியன் (INR இல் 65 கோடிகள்) ஆகும்.  ஒரு நடிகையாக இவரது மாத சம்பளம் ரூ.60 லட்சத்துக்கும் மேல் என்றும் கூறப்படுகின்றது.


 திரைப்படத் துறையில் புகழ்பெற்ற மற்றும் வசதியான நபர்களில் ஒருவராக இருப்பதைத் தவிர, நடிகை ராஷ்மிகா தொண்டு செய்வது மற்றும் சமூக நலம் பேணுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு பிரபலமாக இருக்கிறார்.

இந்த நிலையில் இவரது மனேஜரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவருடைய மனேஜர் ராஷ்மிகாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். அவர் காலில் விழும்போது ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல் நெகிழ்ந்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement