தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.மேலும் டிஆர்பி ரேட்டிங்டில் பின் தள்ளப்படுவதால் பல சீரியல்கள் முடிவுக்கும் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதாலும் பல சீரியல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.அதன் படி அண்மையில் தான் வாடிவாசல் என்னும் சீரியல் ஆரம்பித்தது.
மேலும் புதிதாக ஆரம்பித்த சிறகடிக்க ஆசை என்னும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.இந்த நிலையில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலை விஜய் டிவி முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் தான் சூர்யா மற்றும் வெண்ணிலா திருமணம் நடந்து முடிந்தது .கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அந்த சீரியல் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!