• Jan 18 2025

நான் சம்பளம் உயர்த்தி கேட்பதற்கு காரணம் மீடியா தான்: ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா மந்தனா நடித்த பாலிவுட் திரைப்படமான ’அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாகவும், இதுவரை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, தற்போது நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அமிதாப்பச்சன் உடன் அவர் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’அனிமல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்ற நிலையில் இந்த படம் 900 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது.

இந்த நிலையில் ’அனிமல்’ படத்தின் வெற்றியை அடுத்து அவர் சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக உயர்த்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்த போது ’நான் என் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளிக்கொண்டு இருக்கின்றன. இந்த செய்தியை பார்த்த பிறகு தான் எனக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.



என்னை தொடர்பு கொள்ளும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்கும் போது, ஊடகங்களில் எனக்கு இந்த தொகையை தான் சம்பளமாக தருவதாக செய்தி வெளியிடுகிறார்கள், எனவே அந்த தொகையை சம்பளமாக தந்துவிடுங்கள் என்று நான் கூறி வருகிறேன்.

எனவே நான் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் மீடியாக்கள் தான் என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement