விஜய் டிவியில் இடம்பெற்றுவரும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக்போஸ் இவ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.தொடர்ந்து 7 சீசன்கள் கமலகாசன் அவர்கள் ஒளிபரப்பாளராக கலந்து சிறப்பித்த குறித்த ஷோவின் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நடாத்தி வருகின்றார்.
10 வாரங்களை கடந்தும், எதிர்பார்த்த திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் இல்லாமல் போர் அடிக்கிறது என பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.கடந்த வாரம் நடைபெற்ற "ஏஞ்சல்ஸ் vs டெவில்ஸ்" டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டாலும், அதுவும் முழுமையான எடுப்பில் இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.வழமையான சீசன்களில் காதல் காவியங்கள் மூலம் பிக்பாஸ் டி .ஆர்.பி அதிகரிக்கும் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் ஆண்கள் ,பெண்கள் அணி என பிரித்து விட்டு அதற்கும் வாய்ப்பில்லாமல் செய்து விட்டார்.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான 3 ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் அடுத்தவாரம் டிரெக்ட் நோமினேஷனிற்கு ராணாவினை அனைவரும் "ரொம்ப நடிக்கிறான்,டாஸ்க்கில் பயங்கரமாக இரிடேட் பண்ணார்,வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை "போன்ற காரணங்களிற்காக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வந்த ராணவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மற்றும் அவர் தன்னை தானே நாமினேட் செய்துள்ளார்.
Listen News!