• May 19 2024

Rajini Sir என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு - ஓபனாகப் பேசிய jailor பட நடிகர் ஜாஃபர்

stella / 9 months ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் அப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள இப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது.இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.


இப்படத்தில் ரஜினியின் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் தான் ஜஃபகர். இவர் கவினின் லிப்ட் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் முதலி நாள் ஷீட்டிங்கில் பேசும் போது ரஜினி சேர் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு.

அப்போ நான் அவ்வளவு சீக்கிரமா என்று கேட்டேன். சரி வயசு என்ன என்று கேட்டாரு நான் 27 என்று சொன்னேன். அதுக்கு அவரு மனசில சின்னப் பையன் என்ற நினைப்பா என்று கலாய்ச்சாரு. என்னை மட்டுமில்லை சூட்டிங்கல எல்லாரையுமே இப்பிடி ஏதாவது சொல்லி கலாய்ச்சிட்டு இருப்பாரு என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement