• Sep 22 2023

ethirneechal சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள ஜீவானந்தத்தின் மனைவி மற்றும் மகள்- மீண்டும் ஒரு த்ரில்லர் story ஆ?

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் அதிகபட்ச டிஆர்பி உடன் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள சீரியல் எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கியுள்ள இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பிக் அப் ஆக ஆரம்பித்த இந்த சீரியல், இன்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களமும், கச்சிதமான கதாபாத்திரங்களும் தான்.

இந்த சீரியலுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமில்லாமல், இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் - பெண்களையும் எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது. புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் மூலம், பாரம்பரியம் என்ற பெயரில் குடும்பங்கள் பின்பற்றும் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் தொடராக எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 


இந்த சீரியலின் கதைப்படி குணசேகரனின் சொத்தை ஜீவானந்தம் என்பவர் களவாடி விட்டார். இந்த ஜீவானந்தம் குணசேகரனின் மனைவியான ஈஸ்வரியைக் காதலித்தவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் ஜீவானந்தத்திடம இருந்து எப்படியாவது சொத்தை மீட்டு  விட வேண்டும் என்பதற்காக ஜனனியும் பல முயற்சிகளை செய்து வருகின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் ஜீவானந்ததின் மனைவி என்னும் காரெக்டரில் கயல்விழி என்பவரும் மகளாக வெண்பா என்பவரும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால் சீரியல் இன்னும் விறுவிறுப்பாக நகரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement