• May 22 2024

டான் பட எஸ்.ஜே சூர்யாவாக மாறிய ராஜா ராணி சீரியல் ரவி- விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனும் ரி ஆர் பியில் முன்னணியில் தான் உள்ளது.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகியதை அடுத்து மாடல் அழகி ரியா கதாநாயகியாக நடித்து வருகின்றார். அதே போல வில்லியாக நடித்து வந்த அர்ச்சனா. பிக்பாஸ் செல்வதால் இதிலிருந்து விலகினார்.


இவருக்கு பதிலாக முத்தழகு சீரியல் அர்ச்சனா வில்லியாக நடித்து வருகின்றார்.மேலும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பான இந்த சீரியல் தற்பொழுது கொஞ்சம் சரிவினைச் சந்தித்து வருகின்றது. இந்த சீரியலில் சரவணனின் அப்பாவாக நடித்து வருபவர் தான் ரவி.


இவர் சைவம் திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர். இந்த சீரியலிலும் தனது காமெடி நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்பொழுது டான் படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா போல நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement