• May 26 2025

தாயின் பிறந்தநாளுக்கு சப்பிறைஸ் செய்த ராகவா லாரன்ஸ்..! வெளியான லேட்டஸ் கிளிக்ஸ்..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

திரைப்பட உலகில் தனித்துப் பேசப்படும் கலைஞர்களில் ஒருவராக மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பவர்  நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிகராக மட்டுமல்லாமல், நடன இயக்குநர் மற்றும் சமூக சேவகர் எனப் பல பரிமாணங்களில் திகழ்ந்து வருவதுடன், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெகிழ்வான நிகழ்வுகளை பகிர்ந்து வருபவராக காணப்படுகின்றார்.

அதன் ஒரு பகுதியாகவே, தனது தாயாரின் பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து மிகச் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


ராகவா லாரன்ஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தாயாருடன் எடுத்த பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தாயாருடன் இணைந்து மகிழ்ச்சியாக இருப்பதனை அறியமுடிகிறது.

புகைப்படத்துடன் லாரன்ஸ் பகிர்ந்த உரை மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தது. "என் வாழ்க்கையை உருவாக்கிய என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்கள் ஆசீர்வாதமே எனது சக்தி. உங்கள் முகத்தில் எப்போதும் சிரிப்பு மலர வேண்டுகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


லாரன்ஸ் தன் தாயின் பிறந்த நாளுக்காக பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களை கமெண்ட்ஸில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த ராகவா லாரன்ஸ் ரொம்பவே சந்தோசப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement