• Jan 15 2025

ஊருக்கே உதவி செய்த ராகவா லாரன்ஸ்.. கேப்டன் மகனை இப்படி ஏமாற்றலாமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தேடி தேடி போய் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் அவர் கொடுத்த ஒரு வாக்குறுதியை காப்பாற்றாமல் போனது குறித்து கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் சினிமா துறையில் மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ’படைத்தளபதி’ என்ற திரைப்படத்தில் தான் ஒரு கேரக்டரில் நடித்து தருவதாகவும் இது கேப்டனுக்கு செய்யும் உதவியாக கருதுவதாகவும் அந்த படத்தில் நடிக்க தான் காசு வாங்க மாட்டேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.



இந்த நிலையில் ’படைத்தளபதி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் கேரக்டரின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற இருக்கும் நிலையில் அவருக்காக படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்பதை எடுத்து கேப்டன் மகன் சண்முக பாண்டியன் அதிருப்தி அடைந்ததாகவும் இதனை அடுத்து வேறொரு நடிகரை வைத்து அந்த காட்சியை படமாக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ஊருக்கே ஓடி ஓடி போய் உதவி செய்யும் ராகவா லாரன்ஸ், கேப்டன் மகன் விஷயத்தில் மட்டும் இப்படி ஏமாற்றி விட்டார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அவரது தம்பி எல்வின் நடிக்கும் படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் 13 நாள் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் சொந்த சகோதரருக்கு நடித்துக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ் கேப்டன் மகனை மற்றும் கைவிட்டு விட்டாரே என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement