• Feb 07 2025

விஜயகாந்துக்கு பெல்ட்டால் அடித்த ராதா ரவி..! எதற்கு தெரியுமா? பலநாள் கழித்து வெளியான உண்மை

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் நடிகராகவும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியின் தலைவராகவும்  விளங்குபவரே விஜயகாந்த். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் ராதா ரவி விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அவர் அதில் கூறுகையில் விஜயகாந்த் தற்பெருமை ஏதும் இல்லாது உள்ள ஒருவர் எனக் கூறியிருந்தார். குறிப்பாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த வைதேகி காத்திருந்தாள்  படத்தில் விஜயகாந்திற்கு ராதா ரவி பெல்ட்டாலா அடிக்கிற மாதிரி சீன் இருந்ததாகவும் அந்த சீனை செய்யும் போது எனக்கு தயக்கமாக இருந்ததாகவும் கூறினார் ராதா ரவி.


ஏனெனில் அந்த வேளை முன்னணியில் இருந்த ஆக்சன் ஹீரோக்களில் விஜயகாந்தும் ஒருவர். அத்தகைய ஒருவரை நான் பெல்ட்டால அடிப்பது என்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது எனக் கூறினார். ஆனால் விஜயகாந்த் " அதெல்லாம் ஒன்னும் இல்ல ராதா நீ அடி " எனக் கூறியிருந்தார்.

மேலும் , ஒரு படத்திற்கு அப்படி ஒரு சீன் தேவை என்றால் யார் வேணும் என்றாலும் எதையும் செய்யலாம் என்றார் விஜயகாந்த். இப்படி ஒருத்தரை நான் இதுவரைக்கும் பார்த்ததும் இல்லை இனியும் பார்க்கப் போவதில்லை என நெகிழ்ச்சியில் கூறினார் ராதாரவி.

Advertisement

Advertisement