• Oct 09 2024

போடு வெடிய... ஜெயிலர் இரண்டாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஜெயிலர் சம்பவம் செய்துள்ளது.

ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டன. இதனால் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூல் செய்த ஜெயிலர், இந்தியா முழுவதும் 49 கோடி வரை கலெக்‌ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது.


இதனிடையே  முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்ததாம். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று காட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வசூலும் கொஞ்சம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 10 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் கிடைத்துள்ளதாம்.


இதன்படி, முதல் இரண்டு நாட்களில் ஜெயிலர் திரைப்படம் 105 முதல் 115 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என தெரிகிறது. இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் நிலையை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement