• Jul 03 2024

வெளியாகிறது PS-2 படத்தின் அடுத்த பாடல்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வ'ன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையாடி மாபெரும் சாதனை படைத்தமையை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இதனையடுத்து மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வருகின்றது படக்குழு. அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன் -2’ வெளியாக இருப்பதை ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள ‘சிவோஹம்’ பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement