தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தை சிறப்பாக கொண்டு நடத்தி வருகின்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழ்நாடு முழுவதும் பேசுப் பொருள் ஆனது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை விஜய் நேரில் அழைத்து பாராட்டுவார் என அறிவிக்கப்பட்டது.
அதன் பின் முதற் கட்டமாக அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பாராட்டி ஊக்குவித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நிலையில், அவரையும் அழைத்து பரிசளித்து கௌரவ படுத்தியுள்ளார் விஜய்.
அதன்படி பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுள் ஒரே ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவரான சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் லேடி வெல்டிங் டன் அரசு மாதிரி பள்ளியில் படித்த நிவேதா வெற்றி பெற்றுள்ளார். குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட அவர், பல்வேறு தடைகளைத் தாண்டி +2 தேர்வில் 280 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் நடிகர் விஜய் நிவேதாவை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கும் தனது கையால் பரிசு கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!