உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத் துன்பியல் நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் அஞ்சலி மற்றும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்தான இரங்கல் கவிதையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து "படிப்போமா ?" எனும் கேள்வியுடன் கவிதையை நிறைவு செய்திருக்கிறார்.
"மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான்" என்று கவிதையில் குறிப்பிடும் கவிஞர் அளவுக்கு மீறிய பக்தியும் போதை என்றே குறிப்பிட்டு அறிவுக்கண் திறக்க வேண்டும் என தன் கவிதையில் சொல்லியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில்
ஆன்மிக நெரிசலில்
இறந்துபோன
அத்துணை உயிர்களுக்கும்
அஞ்சலி செலுத்துகிறேன்
சடலங்களுக்கு மட்டுமல்ல
சடங்குகளுக்கும் சேர்த்தே
இரங்குகிறேன்
ஆன்மிகச்
சொற்பொழிவாளரின்
காலடி மண்ணைக்
கவரவேண்டும் என்றுதான்
ஒருவர் காலடியில் ஒருவர்
செத்திருக்கிறார்கள்
இருதயக்கூடு…
Listen News!