• Jan 18 2025

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகுமா "சூர்யா 44" பெஸ்ட் லுக் டீசர் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "சூர்யா 44" படத்தை  2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.படத்தின் இரு பாடல் காட்சிகளுக்கான படிப்பிடிப்பு வேலைகள் அந்தமான் தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில் படிப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Suriya44 Shoot Planned in Andaman ...

முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாய் உள்ள நிலையில் சூர்யாக்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடிக்க படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் வழங்கியுள்ளார்.

Suriya 44 Update: Santhosh Narayanan Joins Karthik Subbaraj

நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த மாதம் 23 ஆம் திகதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் பெஸ்ட் லுக் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement