• Jul 04 2024

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் இந்த பிரபல நடிகர் வில்லனா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி  இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாகுபலி, பாகுபலி 2, மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் காடுகளில் நடக்கும் ஒரு வித்தியாசமான சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் இதில் ஆன்மீக காட்சிகளும் புகுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதையில் திரைப்படம் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.



இந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக மாட்டேன் என்று எஸ்.எஸ்.ராஜமெளலி இடம் மகேஷ் பாபு உறுதிமொழி அளித்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பல இந்திய பிரபல நட்சத்திரங்களும் ஒரு சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் வில்லனாக பிரபல நடிகர் பிரித்விராஜ் நடிகை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் அபாரமாக நடித்திருந்த பிரித்விராஜ், மகேஷ் பாபு படத்தின் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக அவர் இதுவரை வாங்காத சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement