• Jul 05 2024

அரண்மனை 4 ஐ தட்டி தூக்கிய மகாராஜா ! மொத்த வசூல் விபரம் இதோ!

Nithushan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என கூறப்பட்டிருந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையிலேயே இதன் வசூலை மகாராஜா பின்னுக்கு தள்ளியுள்ளது.


மகாராஜா என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய  திரைப்படமாகும் இதனை  நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி , அனுராக் காஷ்யப் , சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ் , நடராஜன் சுப்ரமணியம் , அபிராமி , அருள்தாஸ் , முனிஷ்காந்த் , மணிகண்டன் , சிங்கம்புலி மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா, இந்தியாவில் 76  கோடி, வெளிநாடுகளில் 24 கோடியும் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேலும்  வசூலித்துள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது  இந்தாண்டு வெளியான மற்றொரு படமான 'அரண்மனை-4' படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement