நேற்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்ற போது அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது என்பதும் இந்த நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் திரையரங்குகளை மூடுவோம் என எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவர் திரையரங்குகள் அனைத்தும் மூடிவிட்டால் கூட நாங்கள் எங்களுக்கு ஓடிடி இருக்கிறது அதனால் பிரச்சனை இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வளர்ந்து வரும் டெக்னாலஜி காரணமாக திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே சென்னை உதயம் தியேட்டர் உட்பட பல முன்னணி திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு வருகிறது என்பதும் திரையரங்குகள் அடுக்குமாடி கட்டிடங்களாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நேற்று கூடிய போது ஒரு படம் ரிலீஸ் ஆகி 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வர வேண்டும் என்றும் இனிமேல் தயாரிப்பாளர்களுக்கு 60% வசூல் தொகை மட்டுமே வழங்கப்படும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் திரையரங்குகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு பெயர் சொல்ல விரும்பாத பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறிய போது திரையரங்குகளை நம்பி திரைப்பட தொழில் இல்லை என்றும் தற்போது ஓடிடி நல்ல வருமானத்தை கொடுத்து வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டால் ரூபாய் 500 முதல் 1000 கோடி வரை தருவதற்கு ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கிறது என்றும் தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக திரையரங்குகளை மூடிவிட்டால் கூட சினிமா தொழிலில் எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய கருத்து திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!