• Jan 19 2025

பூமியில் வாழ தகுதி இல்லாதவர்.. ஒழுக்கத்தை கற்று கொள்ளுங்கள்.. த்ரிஷாவுக்காக குரல் கொடுத்த விஷால்..

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரை பூமியில் வாழ தகுதி இல்லாதவர் என்றும் குறைந்தபட்ச ஒழுக்கத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஆவேசமாக நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் நடந்த சம்பவத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சில நடிகைகள் விருந்தாக்கப்பட்டனர் என்றும் குறிப்பாக த்ரிஷா தான் வேண்டும் என்று ஒரு எம்எல்ஏ கூறியதாகவும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகை சேர்ந்த பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனார் த்ரிஷாவும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் விஷால் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த முட்டாள் நம் திரையுலகை சேர்ந்த ஒருவரை கேவலமாக பேசியுள்ளது கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நபரின் பெயரையும் அந்த நபர் குறிப்பிட்ட எங்கள் சக நடிகை பெயரையோ நான் குறிப்பிட விரும்பவில்லை



ஏனென்றால் விளம்பரத்திற்காக தான் இதை நீங்கள் செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் செய்த காரியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை கண்டிப்பார்கள்.

 பூமியில் நீங்கள் ஒரு இழிவான பிறவி, உங்களைப் பற்றி பதிவு செய்வதே எனக்கு வேதனையாக இருக்கிறது. உண்மையில் நான் உங்களை கண்டிக்க விரும்பவில்லை, உங்களுக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த பூமியில் ஒரு மனிதனாக வாழவே நீங்கள் தகுதி இல்லாதவர், நிச்சயமாக ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் முயற்சிதான் இது என்று எங்களுக்கு நன்றாக தெரியும், ஒரு மனிதனாக வாழ குறைந்தபட்ச ஒழுக்கத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள்’ என்று நடிகர் விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement