• Apr 26 2024

பிரியா அட்லியின் வளைகாப்பு.. கையில் பரிசுடன் வந்த தளபதி விஜய்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர்  தான் இயக்குநர் அட்லி.

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லிக்கு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி படங்களாக ஹிட் கொடுத்தது.

தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார்.


இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். 


அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.அத்தோடு  அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.


மேலும் இயக்குநர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி அறிவித்தனர்.


இவ்வாறுஇருக்கையில் பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்வு இன்று நடந்தது. இதில் திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அட்லி & பிரியாவுக்கு நடிகர் விஜய் பரிசு ஒன்றையும் வழங்கினார்.


Advertisement

Advertisement

Advertisement