• Oct 08 2024

மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விஜய் டிவி புகழ்! கலந்து கொண்ட பிரபலங்கள்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் சினிமாவிலும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அதேநேரம் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.


அவருக்கும் பென்ஸி ரியா என்பவருக்கும் 2022ம் ஆண்டு திருணமானது. கடந்த வருடம் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ரித்தான்யா என அக்குழந்தைக்குப் பெயரிட்டனர். அக்குழந்தையின் முதலாவது பிறந்தநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.


அதில் சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். நடிகர் சூரி, விடிவி கணேஷ், செப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்திருந்தார். 



Advertisement