• May 09 2024

சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் நடிக்கும் முக்கிய படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிரஞ்சீவி. இவர் தற்பொழுது காட்பாதர்’ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் மீது ஹிந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் நிலையில், தற்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது காட்பாதரின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிரஞ்சீவி, இயக்குநர் மோகன் ராஜா மற்றும் பிரபல நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் இணைந்து அவரை வரவேற்க ஒரு புகைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது காட்பாதரில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானின் சிறப்புப் பாடலுக்கு தமன் இசையமைக்க பிரபுதேவா நடனம் அமைக்கிறாராம். தீவிர அரசியல் படம் என்று கூறப்படும் காட்பாதர் மலையாளப் படமான லூசிஃபரின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை கொனிடேலா புரொடக்‌ஷன் நிறுவனம் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்க, சத்யதேவ் காஞ்சரனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement