• May 18 2024

விடுதலை படத்தால் வாடிவாசல் திரைப்படத்திற்கு ஏற்பட்ட புதிய சோதனை- திட்டத்தை மாற்றிய சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவரைாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டதோடு டெஸ்ட் ஷூட் மட்டும் நடைபெற்றது.

மேலும், வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா சில பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது , விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம்.

இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் அதற்கு முன் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement