• May 18 2024

தளபதி 66 படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்- அட இவர் விஜய்யின் வெற்றிப் படங்களில் நடிச்சவராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இவர் இறுதியாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்திருக்கின்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தில் ராஜு தயாரிப்பதோடு விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கிவிட்டது. மேலும், இப்படத்தின் First லுக் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்யுடன் மீண்டும் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு இணைகின்றாராம். இவர் இதற்கு முன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement