பிரபல போஜ்புரி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அக்ஷாரா சிங். இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்கி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாது பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகை அக்ஷாரா பங்கேற்க சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருந்தார். இதனையடுத்து ஒரு சிலர் அவரிடம் தவறாக நடக்க முயன்றிருந்தனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பின்பு போலீசார் தடியடி நடத்தி அக்ஷாரா சிங்கை அவர்களிடமிருந்து மீடடெடுத்தனர். இதனால் அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பினார். இந்த நிலையில் தற்போது அக்ஷாரா சிங் இளைஞர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்று இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் அந்த இளைஞர் அக்ஷாராவின் காதலர் என்று கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் குறித்த வீடியோ வெளியானது முதல் அக்ஷாரா சிங்கை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது வீடியோவில் இருப்பது அக்ஷாரா சிங் தானா அல்லது அவரைப்போன்ற கிராபிக்ஸ் வீடியோவா என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Listen News!