• Jan 19 2025

ராப் பாடகர் அசல் கோளாறுக்கு அடித்த ஜாக்பாட்.. தளபதி 69ல் தரமான சம்பவம் லோடிங்..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய்க்கு என்று மிகப்பெரிய மார்க்கெட் காணப்படுகின்றது. இவரை வைத்து இயக்குவதற்காக பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றார்கள். ஆனாலும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் விஜய் தனது 69 வது படத்துடன் சினிமா துறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றார். இதன் காரணத்தினால் எச் வினோத் இயக்கும் தளபதி 69 ஆவது படத்துடன் சினிமா துறையில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தார். அதன் பின்பு முழு நேரமாகவே அரசியலில் மக்களுக்காக பயணிக்க உள்ளார்.

தளபதி 69 படத்திற்கான அப்டேட் தொடர்ந்து வெளியானது. அதன்படி இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, நரேன், பிரகாஷ்ராஜ், பாபி தியோல்  ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்த நிலையில், தளபதி 69ஆவது படத்தில் பிக் பாஸ் பிரபலமான அசல் கோளாறு பாடல் ஒன்றை எழுத உள்ளார். ஏற்கனவே இவர் லியோ படத்தில் 'நான் ரெடி தான் வரவா' என்ற பாடலை எழுதியிருந்தார்.

தற்போது அசல் கோளாறுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பாக தளபதி 69 ஆவது படத்தில் பாடலை எழுதி பாட உள்ளார்.  இந்த பாடல் எப்படி இருக்க போகின்றது என்பதை பொறுத்துக் இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement