• Apr 03 2025

இரட்டை வேடத்தில் த்ரிஷா .. அதுவும் மெகா ஸ்டாருடன்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா முதல் முறையாக இரட்டை வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் அந்த படம் அவருக்கு திரை உலகின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாபொன்னியின் செல்வன்திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய்யுடன்லியோபடத்தில் நடித்த அவர், அஜித் உடன்விடாமுயற்சிபடத்திலும் நடித்து வருகிறார்.

அது மட்டும் இன்றி கமல்ஹாசன் உடன்தக்லைஃப்’, மோகன்லால் உடன்ராம்நிவின் பாலி உடன்ஐடென்டிட்டிமற்றும் சிரஞ்சியுடன்விசுவாம்பராஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிரஞ்சீவியின்விசுவாம்பராபடப்பிடிப்பில் இணைந்த த்ரிஷாவுக்கு, இயக்குனர் இன்ப அதிர்ச்சியாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறியவுடன் அவர் ஆச்சரியம் அடைந்ததாகவும் அதே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



சிரஞ்சீவி தான் இந்த படத்தின் ஹீரோவாக இருந்தாலும் த்ரிஷாவின் இரட்டை வேடங்கள் தான் படத்தின் திருப்புமுனையை கொடுக்கும் கேரக்டர் என்றும் நிச்சயம் த்ரிஷா இந்த கேரக்டர் மூலம் பான் இந்திய நடிகையாக மாறுவார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் த்ரிஷாவுடன் நடித்த நடிகைகள் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா மட்டுமே ஓரளவுக்கு தாக்குப் பிடித்து த்ரிஷாவுக்கு இணையாக வந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் த்ரிஷா திரையுலகின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் நயன்தாராவும் அவரை எட்டிப் பிடிக்க முடியாது என்று தான் கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement