• Apr 28 2024

மீண்டும் கமலுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை..அடடே இவருடைய இயக்கத்திலா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அப்படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.அத்தோடு  நாயகன் படத்திற்கு பிறகு கமல் - மணி ரத்னம் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

அத்தோடு ராஜ் கமல் - ரெட் ஜெயிண்ட் - மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று முன்னணி நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கிறது.

இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா தேர்ந்தெடுத்துள்ளாராம் இயக்குனர் மணி ரத்னம்.


பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் திரிஷா நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement