பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் ஒரு பெண் நுழைய முயற்சி செய்த சம்பவம், தற்போது மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஷா சாம்ரா என்ற பெயருடைய அந்தப் பெண்,சல்மான் கானை நேரில் சந்திக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்பை மீறி வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பாதுகாப்பு பணியாளர்கள் சீராக செயல்பட்டு உடனடியாக பொலீஸாருக்குத் தகவல் கொடுத்து, அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளனர்.
சல்மான் வீட்டின் அருகே குவிந்திருந்த ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் தனியாக பிரிந்து, சுவர் ஏறி வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இந்த நுழைவின் நேரத்தில், பாதுகாப்பு ஊழியர்கள் தங்களுடைய இயல்பான கண்காணிப்பு பணியைச் செய்தபோது சந்தேகமடைந்து உடனே தடுக்க முயன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சல்மான் கானும், அவரது பாதுகாப்பு குழுவும் இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. ஆனால், அந்த சம்பவம் நடந்த நேரத்தில் சல்மான் வீட்டில் இருந்தாரா? இல்லையா..? என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
Listen News!